பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

2 தம்பியரிற் சிறந்தவன் யார்?

இராமன் தம்பி பரதனா? வாலி தம்பி சுக்ரீவனா? ... . . இராவணன் தம்பி விபீஷணனா?

கம்பன் காவியமான இராமாயணம் பல பட்டி மன்றங்களுக்குப் பொருள் தந்து உதவுகிறது. இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட பொருள் தம்பியரில் சிறந்தவன் யார்? ஆதிகாவியமான வான்மீகரது இராமாய ணம் எப்படி இருக்கிறதோ, கவிச்சக்கரவர்த்தி கம்பனது இராமாயணம் சகோதரத்வம் என்னும் அரிய பண்பை விளக்க எழுந்த காவியமாகவே காணப்படுகிறது. அதில்தான் எத்தனை எத்தனை அண்ணன் தம்பியர், காவிய நாயகனான ராமனுக்கு உடன்பிறந்த தம்பியர் மூவர் என்றால், உடன் பிறவாத் தம்பியர் மூவர். எனவே ஆறு தம்பியர் என்று கணக்கு. இன்னும் கிஷ்கிந்தையில் வாலிக்கு ஒரு தம்பி என்றால் இலங்கையில் இராவன னனுக்கு இரண்டு தம்பியர்.

இந்திரஜித்தனுக்கு வேறே இரண்டு மூன்று தம்பியர். இப்படி ஒரே தம்பியர் கூட்டமாகவே காவியம் வளர்ந்திருக்கிறது. அனைத்துலக மனிதனை நோக்கி,