பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பட்டிமண்டபம்

நமது கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இன்று நடந்தால், அன்றே கம்பன் அனைத்துலக சகோதரத்வத்தை நோக்கி நடந்திருக்கிறான். இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், ஒரு தம்பி அண்ணனிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக இருந்தால், ஒரு சில தம்பியர், எப்படி இருக்கக்கூடாது என்பதற்குமே எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். இத்தகைய ஒரு அரிய காவியத்திலே இன்று மூன்று தம்பியரின் தராதரத்தினை நிர்ணயித்து முடிவு காண வேண்டியிருக்கிறது.

இவ் விவாதத்தை இன்று துவக்கி வைத்த அன்பர் இந்த விவாதத்தின் தலைப்பை எத்தனை கோணங்களிலிருந்து பார்க்கலாம் என்று குறிப்பிட்டார். குறித்த தம்பியர் மூவரில் சிறந்த தம்பி யார் என்று பார்க்கலாம். இல்லை,தம்பியாக அமைந்த இம்மூவரில் சிறந்த பண்புகள் நிறைந்தவர் யாரென்றும் பார்க்கலாம். இன்னும் காவிய நாயகனான ராமனுக்கு உற்ற துணை வர்களாக இருந்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து நின்று அதில் சிறப்புற்றவர் யார் என்றும் பார்க்கலாம் என்றார். சரி, இத்தனை கோணங்களிலுமே நின்று பார்த்து இந்த மூவரையும் எடைபோட்டு விடலாம். முதலில் இவர்களது தன்மைகளை எல்லாம் கவிச்சக்கரவர்த்தி எப்படி விளக்குகிறான் என்று பார்த்து விடுவோம். -

பரதன் ராம்னது தம்பி. இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லர். ஒரு தந்தைக்கு இரண்டு தாயாரிடம் பிறந்த சகோதரர்கள் ராம்னும், பரதனும். முதன்முதல் பரதனை நமக்கு அறிமுகப்படுத்துகிற கவிஞன்,

தள்ளரிய பெருநீதித்

தனியாறு புகமண்டும்