பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 34

பள்ளம் எனும் தகையானை

பர்தன் எனும் பெயரானை

எள்ளரிய குணத்தாலும்

எழிலாலும் இவ்விருந்த

வள்ளலையே அனையானைக்

கேகயர் கோன்மகன் பயந்தனள்

என்று பாடுகின்றான். கோசிக முனிவர் ராமனது குலமுறை கிளத்தும்போது, பரதனைப்பற்றி ஜனகரிடம் பேசுகிறார். உடல் அழகாலும், உள்ளப் பண்பாலும் ராமனையே ஒத்திருப்பவன் பரதன் என்பது முதல் அறிமுகம். பின்னர் பரதன் தனது குணத்தாலும், தியாகத்தாலும் வளர்ந்துகொண்டே போகிறான் கவிஞன் சிந்தனையில், இப்படி வளர்ந்த பரதனையே பிறகு கங்கை வேடனாகிய குகனால் ஆயிரம் ராமர் நின்கேன் ஆவரோ? என்றும், கடைசியில், ராமனது தாயாம் கோசலையின் வாயாலேயே - -

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ என்றும் உயர்த்தியே விடுகிறான். ஆம், முன்னமேயே கோசலையாம் மாற்றாந்தாயாலேயே “நிறை குணத்தவன், நின்னினும் நல்லன்” என்று பாராட்டப் பெறும்பேறு பெற்றவன் ஆயிற்றே? இந்தப் பரதன் தனது அண்ணனை எப்படி மதிக்கிறான் என்பதை, ராமன் காடு சென்றபின், கேகய நாட்டிலிருந்து திரும்பியுவுடன், கேகயர் கேமகள் இழைத்த கைதவத்தை அறியாத நிலையில் அவன் பேசும் பேச்சிலேயே தெரியலாம். -

எந்தையும், யாயும் எம்பிரானும் எம்முனும் அந்தமிழ் பெருங்குணத்துராமன்