பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பட்டிமண்டபம்

என்று கூறிதன்தமையனேதனக்குத்தந்தை, தாய், குரு, தெய்வம் எல்லாம் என்று கருதுபவனாக அமைந் திருக்கிறான் அவன் என்று காட்டுகிறவன் கம்பன். பின்னர், தன்தாய் செய்த சூழ்ச்சியினால்தான்தமயன்காடு. சென்றான். தந்தை இறந்தான் என்று அறிந்தபோது தன் தாயின்மேல் வெகுண்டு எழுகிறான். 'நீ என்தாயில்லை," "பழிவளர்த்தவள், என்றெல்லாம் திட்டுகிறான். அவளது ஆயுளை முடிக்காமல் இருந்தால், அது அவன் தாய் என்பதினால் அல்ல, தன் தமையன் கோபித்துக் கொள்வானே என்பதினால்தான் என்றும் கூறுகிறான். இப்படித்தாய் வரங்கொள்ள, தந்தை உதவிய ராஜ்யத்தை ஏற்க மறுத்து, ராமன் சென்ற காட்டிற்கே தானும் சென்று ராமனே திரும்பி வந்து ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறான். தர்ம நியாயங்களை எடுத்துக்கூறி ராமன் அவ்விதம் வர மறுத்தபோது அவனது பாதுகைகளை வாங்கி வந்து நகர்க்கு வெளிப்புறத்தில் நந்திக்கிராமத்தி லேயே தங்கி இருக்கிறான். பாதுகைகளுக்கே பட்டா பிஷேகம் நடத்தி, தான் ராமனின் பிரதிநிதியாக இருந்தே ராஜ்யாதிகாரம் பண்ணுகிறான். பதினான்கு வருஷங்கள் கழிந்தும் ராமன் வரக் காலந்தாழ்த்துவது கண்டு, எரி வளர்த்து அதில் பாய்ந்து உயிர் துறக்கவும் துணிந்து விடுகிறான். இத்தகைய தம்பியாகிய பரதன், ராமனிடத்து எவ்வளவு அன்புடையவனாக இருக்க வேண்டும்? எவ்வளவு சிறந்த பண்புகள் நிறைந்தவனாக இருக்க வேண்டும்?. -

வாலியின் தம்பியாகிய சுக் ரீவனோ, உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கம் உடைய குரங்கினத் தலை வனாக இருககிறான். பிலத்துக்குள் சென்ற அண்ணன் வரவில்லை என்றும், அங்கிருந்து உதிரம் பெருகுகின்றது