பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 33

என்றும் அறிந்தபோது பிலத்தின் வாயிலையே அடைத்துவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பிவிடுகிறான். மந்திரி பிரதானிகள் வேண்டிக்கொண்டபடி மகுடத்தை யும் சூடிக் கொள்கிறான். பிலத்திலிருந்து தமையன் வெளி வந்ததும் ராஜ்யத்தைக் கொடுத்துவிடத் தயாராக இருக் கிறான். ஆனால், வாலியோ தம்பிமேல் சீறி அவனை நாட்டை விட்டுத் துரத்திவிடுவதுடன் அவன் மனைவி யையும் அபகரித்துக் கொள்கிறான். இந்த விவரங்களை அனுமன் மூலம் ராமன் அறிகிறான்.

உரிமை என்று இவர்க்கு

உரிய தார மாம் அரு மிருந்தையும் அவன்

விரும் பினன் இருமையும் துறந்து

இவன் இருந்தனன் என்று அனுமன் சொன்னதும் ராமன் சுக்ரீவனைத் தன் தம்பியாக ஏற்றுக் கொள்கிறான். 'உன்னைச் செற்றார் என்னைச் செற்றார், உன்னோடு உற்றார் எனக்கும் உற்றார். என்றே உறவு கொண்டாடுகிறான். வாலியைப் போருக்கு அழைக்கச்சொல்கிறான். வாலியும் சுக்ரீவனும் போரிடும் பொழுது மறைந்து நின்று வாலியை வீழ்த்தி விடுகிறான். இந்த சுக்ரீவன்ராமனது துணைவலியால் கிஷ்கிந்தையில் முடிசூட்டிக்கொண்டு வாழ்கிறான். அப்படி வாழும் போது கார்காலம் குறுக்கிடுகிறது. ராமன் செய்த நன்றியை மறந்து விடுகிறான். நட்பினையும் துறந்து விடுகிறான். பின்னர் இலக்குவன் வெகுண்டெழுந்தபோது, ஒடிவந்து ராமன் திருவடி பணிகிறான். தன்பிழை பொறுக்க வேண்டுகிறான். சீதையை தேட வானர வீரர்களை அனுப்புகிறான். அதன் பின் படையெடுத்து இராவண