பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பட்டிமண்டபம்

னோடு போர் செய்யும் போது, பலவகையிலும் fJ TLD னுக்குத்துணைநின்று, ராமன் வெற்றிபெற உதவுகிறான். இதுதான் சுக்ரீவன் வரலாறு. -

இராவணன் தம்பி விபீஷணனோ தன் தமையனிடம் அளவற்ற அன்புடையவனாக வாழ்கிறான். ஆனால், அவன் தவறு செய்து அதனால் பழி எய்துகிறான் என்ற போது இடித்துரைக்கத் தவறவில்லை. தான் ஏன் அப்படி சொல்கிறான் என்பதையும் அவனே கூறுகிறான்.

எந்தை நீ, யாயும் நீ, எம்முன் நீ, தவ வந்தனைத் தெய்வம் நீ, மற்றும் முற்றும் நீ இந்திரப் பெரும் பதம் இழக்கின்றாய் என நொந்தனன் ஆதலின் நுவல்வதாயினேன் என்று தன் அன்பின் வெளிப்படையாகவே உரைக் கிறான். ஆனால், இராவணனோடு விபீஷணன் ச்ொன் னதையெல்லாம் r - -

‘பிச்சர் சொல்லிய சொல்லினை என்று உதறிவிடுகிற போதும் இரணியன் கதையையே எடுத்துச்சொல்கிறான். அதையும் ஏற்காது தான் நினைத்த வழியே நடக்கும் அண்ணனைத் திருத்துதல் இனி இயலாது என்று காண்கிறான். தன்முன் நில்லாதே என்று இராவணன் அவனை விரட்டிய பின்தான், விபீஷணன் ராமனிடம் சென்று அவனை அடைக்கலம் அடைகிறான். அவன் விரும்பியது இலங்கை அரசை அல்ல. வீட்டரசை விரும்பியேராமனைச்சரண் அடைகிறான். பின்னர் நடந்த போரில் இராவணனும், அவனைச் சேர்ந்தவர்களும் செய்யும் மாயமந்திரங்களை எல்லாம் ராமனுக்கு எடுத்துக் காட்டி அவன் போரில் வெற்றி பெறப் பலவகையிலும்