பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் QTETಣLITಣಿ! 35

உதவுகிறான். இந்திரசித்தனை இலக்குவன் முடித்ததும் 'இது வீடணன் தந்த வெற்றி என்றே ராமன் பாராட்டு கிறான். இராவணவதம் முடியும் வரை விபீஷணன் ராமனுக்குப் பக்க பலமாகவே நின்றிருக்கிறான். சாதியால் வந்த சிறுநெறியை, உடன்பிறப்பால் ஏற்படும் பாசத்தை எல்லாம் உதறத் தெரிந்து நீதியால் வந்த நெடுந் தரும நெறியில் நிற்க முனைந்தவன் என்று கம்பன் பாராட்டுகிறான். இவன் மேதாவிகளுக்கு எல்லாம் மேலானவன் என்றே பாராட்டப்படுகிறான்.

இப்படித் தம்பியர் மூவரும் சிறந்து நிற்கிறார்கள் காவியத்தில். இன்று இவ்விவாதத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் பொதுவாகச் சிறந்த தம்பியாகப் பரதனும், சிறந்த பண்புள்ளவனாக விபீஷணனும், ராமனுக்கு உற்ற சிறந்த துணைவனாக சுக்ரீவனும் இலங்குகின்றார்கள் என்றே விவரித்தனர். பரதனையும், விபீஷணனையும் பற்றி அவர்கள் சொன்னது எனக்கு உடன்பாடே. ஆனால், சுக்ரீவன் இருக்கிறானே, அவன் ராமனுக்குத் துணை யிருந்து சிறப்புப் பெற்றான் என்றால், அவனை விடச் சிறப்பாகவேதுணைநின்றிருக்கிறான் விபீஷணன் என்றே சொல்லத் தோன்றுகிறது. விபீஷணன் இல்லாவிட்டால் ராமனால் இராவணவதத்தை முடித்திருக்க இயலுமோ என்னவோ என்று கூட ஐயம் தோன்றுகிறது. சுக்ரீவன் ராமனுக்குத் துணை நின்று எவ்வளவோ சிறப்புப் பெற்றான் என்றாலும் ராமன் துணை கொண்டு தன் அண்ணனைக் கொல்வதற்கு அடிகோலினான் என்ப தொன்றே அவனைக் கீழ் மகன் ஆக்கி விடுகிறது. ஆதலால், அவன் சிறந்த தம்பியாக இருத்தல் முடியாது. எப்போது ராமன் செய்த சேவையைக் கூட மறந்து ராஜ்ய வாழ்விலும், காமக் களியாட்டங்களிலும் மயங்கி