பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பட்டிமண்டபம்

விடுகிறானோ, அப்பொழுது அவனைச்சிறந்த பண்புகள் நிறைந்தவன் என்றும் சொல்ல இயலாது. ஆதலால், முதலில் விவாதத்திலிருந்து இவனை நீக்கி விடலாம்.

இனி இருப்பவர் பரதனும், விபீஷணனுமே. விபீஷணன் சிறந்த குணவான், சிறந்த சத்யாக்கிரஹிதான், என்றாலும் அவன் சிறந்த தம்பியாக முடியாது. இராவ ணனது இன்னொரு தம்பி கும்பகர்ணன் அண்ணன் தவறு செய்கிறான் என்றால் அவனைத் திருத்த முயலலாம். அப்படித் திருத்த முடியாவிட்டால் அவனை விட்டுப் பிரியாமல் அவனுடன் சேர்ந்து போர் செய்து அவன் சாவதற்கு முன்னமேயே சாவதுதானே தம்பியின் பணியாக இருத்தல் வேண்டும் என்று சொல்வதோடு நிற்காமல் அப்படியே நடந்தும் காட்டுகிறானே. இதைத் தானே கம்பன்

கருத்து இலா இறைவன் தீமை

கருதினால், அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் நன்றே

திருந்துதல் தீராதாயின் பொறுத்துறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியராகி ஒருத்தரின் முன்னம் சாதல்,

உண்டவர்க்கு உரியதம்மா!

என்று பாடுகிறானே. இந்த உரைகல் லின்படி விபீஷணன் சிறந்த தம்பியாக இருத்தல் இயலாதுதானே. இன்னும் சொல்லப் போனால் விபீஷணனே இந்த விவாதத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ள விழைகிறான் என்பதையும் காண்போம். நிகும்பலையில் இந்திரசித்தன் இவனைத் தூற்றுகின்றபோது