பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 37

அறம் துணை ஆவது அல்லால்

அரு நாகு அமைய நல்கும் மறம் துணை ஆக, மாயாப்

பழியொடும் வாழமாட்டேன் துறந்திலேன் மெய்ம்மை

பொய்ம்மை உம்மைய்ேதுறப்பது அல்லால் பிறந்திலேன் இலங்கை வேந்தன்பின்

அவன் பிழைத்த போதே!

என்றே கூறி விடுகிறான். ஆம், எப்போது வழிதவறிச் சென்று விட்டானோ அதன்பின் நான் அவன் தம்பியே அல்ல என்றல்லவா கூறியிருக்கிறான். அவனேwithdraw பண்ணிக்கொள்ளும்போது அவனைச்சிறந்த தம்பி என்று பாராட்டுவானேன்? எஞ்சிநிற்பவன், பரதனே. இவனைச் சிறந்த தம்பி என்று கூறப் பல சான்றுகளைத் தேட வேண்டாம். ராமனே கூறுகிறான்,

எத்தாயர் வயிற்றில் பின் பிறந்தார்கள் எல்லாம் - ஒத்தால் பரதன் போல் பெரிதும் உத்தமன் ஆவதுண்டோ என்று. இப்படிச் சொல்லும் போது, வீடணன் அரங்கிற்கு வரவில்லையென்றாலும், அவனையும் உள்நினைவில் வைத்துக் கொண்டேதான் கம்பன் பாடியிருக்கிறான் என்று தானே சொல்லத் தோன்றுகிறது. மேலும், சேண் உயர் தருமத்தின் தேவன் செம்மையின் ஆணி என்றும் அவனை உயர்த்திப் பேசுகிறான் ராமன். அவன் சிறந்த தம்பி மாத்திரம் அல்ல சிறந்த பண்புகள் நிறைந்தவனும் அவனே என்று எளிதாகக் கூற முடிகிறது. ராமனுக்குப் போரில் அவன் துணை நிற்கவில்லை என்கிறார் சிலர். உண்மைதான். அதற்கு அவனுக்கு வாய்ப்பு எங்கே இருக்கிறது? அதோடு, ராமன் காடு