பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பட்டிமண்டபம்

சென்று துஷ்ட நிக்ரஹதம் செய்து கொண்டிருந்தபோது

நாட்டிலிருந்து சிஷ்டபரிபாலனம் செய்து கொண்டிருக்

கிறானே பரதன், தன் அண்ணன் கட்டளைக்குக்

கீழ்ப்படிந்து, அது போதாதா? ஆதலால் எல்லா வகை யிலும் தம்பியரில் சிறந்தவன் பரதனே என்றுதான்

முடிவுகட்ட வேண்டியிருக்கிறது.

பட்டிமன்றத்தில் இந்த விவாதம் இன்றுதான் முதன் முதல் நடந்திருக்கிறது என்றில்லை. பல் வருஷங்களுக்கு முன்னே தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த வரதுங்கராம பாண்டியன் சபையிலும் நடந்திருக்கிறது என்று தெரிகிறது. அப்பட்டிமன்றத்திற்குத் தலைமை வகித்த வரதுங்கராமன் மனைவி இதே தீர்ப்பையே கூறியிருக்கிறாள். - -

செங்கதிரோன்மைந்தனையும்

தென்னிலங்கை வேந்தனையும் பஞ்சவரில் பார்த்தனையும் -

பாராதே - விஞ்சு விரதமே பூண்டு இந்த

ம்ேதினியை ஆண்ட பரதனையும் ராமனையும் பார் என்பதுதானே தீர்ப்பு. அதே தீர்ப்பைத்தான் நானும் வழங்கி இருக்கிறேன் இன்று. வரதுங்கன் மனைவியை விட நான் மிக அறிவுடையவன் என்று கூற முடியாதே.