பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

3

உடன் பிறவாத் தம்பியரில் உயர்ந்த தம்பி யார்?

குகனா? சுக்ரீவனா? - விபீஷணனா?

இராமகதை உலக இலக்கியத்திலேயே ஓர் உயர்ந்த இடம் பெற்ற கதை. இக்கதையை முதன்முதல் உலகுக்குத் தந்தவர் வடமொழிக் கவிஞரான வான்மீகி முனிவர். பின்னரே தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பனும், இந்தியில் துளசிதாஸ்ரும் எழுதியிருக்கிறார்கள். இன்னும் இந்திய மொழி பலவற்றிலும் இக்கதை மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. -

ஆதிகவி வான்மீகி இக்கதையை ஏன் எழுதினார் என்பதற்கு ஒரு சுவையான கதை உண்டு. வான்மீகி முனிவர்காட்டிலேயே பர்னசாலை அமைத்துக்கொண்டு வாழ்கிறார். ஒரு நாள் நாரதர் அவரைத் தேடிக்கொண்டு வருகிறார். அவரிடம் வான்மீகி கேட்கிறார், இந் நிலவுலகிலேயே நிறைந்த அழகும், சிறந்த குணங்களும் உடையவன் யார்? நல்ல ஆண்மையும் அருளும்