பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பட்டிமண்டபம்

உடையவன் யார்? உயர்ந்த தருமங்களையும், நீதிகளையும் அறிந்தவன் யார்? ஆம், பதினாறு கல்யாண குணங்களும் உடைய உத்தம புருஷன் யார்? என்று கேட்கிறார். இத்தனைகேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். அழகனாக, வீரனாக, சிறந்த குணங்கள் நிறைந்தவனாக இருப்பவன் ராமனே. சத்திய சந்தனும், தருமம் உணர்ந்தவனும் அவனே என்று கூறுகிறார் நாரதர். சகலகுண சம்பன்ன னாக, உத்தம புருஷனாக இருக்கும் ராமனது கதையையே, வான்மீகி ஒர் அற்புதமான காவியமாக எழுதுகிறார். அக்கதையில் வரும் குகனையோ, சுக்ரீவனையோ, இல்லை விபீஷணனையோ ராமன் சகோதரனாக ஏற்றுக் கொண்டான் என்று வான்மீகி கூறவில்லை. கடைசியில் ராமர் பட்டாபிஷேகம் நடக்கும்போது இவர்களில் ஒருவரையோ, அன்றி மூவரையும்தானோ 'பிராதா" என்று குறிப்பிடுகிறார் என்பர் வடமொழியில் எழுந்த இந்த இராமகதையைக் கற்றவர். -

ஆனால், -

இந்தக் கதையை அற்புதமான பாக்களிலே எழுதிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் இக்காவியம் மூலம் ஓர் உலக சகோதரத்துவத்தை, ஒரு தேசிய ஒருமைப்பாட்டையே உருவாக்கியிருக்கிறான். காரணம் தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்திருக்கிறான். சின்னஞ்சிறு ராஜ்யங் களாக தமிழ் நாடு சேர சோழ பாண்டிய பல்லவர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. இத்தமிழ்நாட்டின் வரலாறே இவர்களுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நடந்த போர்களாகவே இருக்கக் கண்டிருக்கிறான். இப்படிப் போரிட்டுப் போரிட்டு சாம்ராஜ்ய வெறி கொண்ட தமிழ் அரசர்களையே கண்டவன், வான்மீகியின் இராமா கதையைக் கேட்டிருக்கிறான். அக்கதாநாயகனான ரர்மன்