பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 41

தாய் வரங்கொளத் தந்தை ஏவுகிறான் என்பதற்காக ஒரு சாம்ராஜ்யத்தையே துறந்து காட்டிற்குச் செல்கிறான். ஒருவரும் ஏவாமலேயே அவன் இணைபிரியாத் தம்பியான இலக்குவன், வில்லைத் தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு காட்டிற்குச் செல்லும் அண்ண னுடனேயே புறப்பட்டு விடுகிறான். தாயாகிய கைகேயி, பலரது விருப்பத்திற்கு எதிராகத் தன் கணவனிடம் வரம் பெற்று அதன் மூலம் உரிமையாக்கிய சக்கரவர்த்தி பதவியைத் துர வென்று தள்ளிவிட்டு காடு சென்ற அண்ணனைத் திரும்பவும் நாட்டுக்கு வரும்படி அழைக்கிறான் இன்னொரு தம்பி பரதன். அவன் வர இணங்காதபோது அவனது பாதுகையையே பெற்று வந்து அதற்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து அவற்றின் பிரதிநிதியாக ஊருக்கு வெளியிலேயே இருந்து அரசு புரிகிறான்.அவன். - -

கானாளச் செல்கின்ற ராமன், கங்கைக் கரையில் வேட்டுவத் தலைவனான குகனையும், கிஷ்கிந்தையில் வாணர வீரனான சுக்கிரீவனையும், இலங்கையில் தன் பகைவனின் சகோதரனான விபீஷணனையுமே தன் தம்பியர் குழாத்தில் சேர்த்துக் கொள்கிறான்.

குகனோடும் ஐவரானோம் முன்பு,

பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த

அகனமர் காதல் ஐய!

நின்னொடும் எழுவர் ஆனோம்

புகலரும் கானம் தந்து

புதல்வரால் பொலிந்தான் உந்தை