பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பட்டிமண்டபம்

என்று ராமன் சொன்னதாகக் கம்பன்பாடுகிறான். ஆம். உடன்பிறந்த தம்பியர் மூவரோடு, உடன்பிறவாத் தம்பியராக மூவரையும் சேர்த்துக்கொண்டு நாங்கள் எழுவர் "We are Seven" என்று கட்டியங் கூறுகிறான் கம்பன் உருவாக்கிய ராமன். இப்படி ஒர் அற்புத சகோதரத்துவம் என்ற தன்மையையே இப்பாத்திரங்களின் மூலம் உருவாக்கிக் காட்டுகிறான் அவன்.

இந்த உடன்பிறவாத் தம்பியர் மூவரில் உயர்ந்த தம்பி யார் என்பதே இன்றைய பட்டிமன்றத்தில் விவாதிக்க எடுத்துக்கொண்ட பொருள். விவாதித்தவர்கள் எல்லாம் நன்றாகக் கம்பனைக் கற்றவர்கள். அக்காவிய நயத்தை யெல்லாம் உணர்ந்தவர்கள். ஆதலால், மிகவும் தெளி வாகத் திறமையாகத் தாங்கள்தாங்கள் எடுத்துக் கொண்ட கட்சியை விளக்கமாகவே எடுத்து உரைத்திருக்கிறார்கள்.

இந்த மூவரையும் எந்த எந்த நிலையில் ராமன் தம்பியாக ஏற்றுக் கொள்கிறான் என்று பார்ப்போம்.

அயோத்தியை விட்டுப் புறப்பட்ட ராமன், லக்ஷ்மணன், சீதை மூவரும் கங்கைக்கரை வந்து சேர்கிறார் கள். கங்கையைக் கடந்தே காடு செல்லவேண்டியிருக் கிறது. கங்கை இருகரை உடையவனாகவும், கணக்கிறந்த நாவாய்களுக்கு அதிபனாகவும் குகன் என்னும் வேட்டுவ அரசன் வாழ்கிறான். அவன் சக்கரவர்த்தித் திருமகனான ராமனைப் பார்த்ததில்லையே ஒழிய, அவனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறான். அவனைக் காணவும் ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிறான். அத்தகைய ராமன் தான் ஆட்சி செலுத்தும் கங்கைக் கரைக்கே வந்து, அங்குள்ள முனிவர்களோடு தங்கியிருக்கிறான் என்று அறிந்தபோது, தேனும் மீனும் எடுத்துக் கொண்டு