பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் - - 43

அவனைக் காண வருகிறான். முதலில் லக்ஷ்மணனைச் சந்திக்கிறான்.குகனை அவன் அழைத்துச் சென்று ராமன் முன்பு நிறுத்துகின்றான். 'தேவா நின் கழல் சேவிக்க வந்துள்ள நாவாய் வேட்டுவன் நாயடியேன்" என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ராமனிடத்து கரைகாணாக் காதல் பிறக்கிறது அவனுக்கு. ராமனும், அவனைத் தன் பக்கம் உட்காரும் படிப் பணிக்கிறான். அந்த அந்தஸ்தைப் பெறத் தனக்கு யோக் யதை இல்லை என்று உணர்ந்த குகன் இருக்க மறுத்து விடுகிறான். தான் கொண்டு வந்திருக்கும் உணவை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான்.

இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எளிய நீத்த அருத்தியன், தேனும் மீனும்

அமுதினுக்கு அமைவதாக திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம்

என்று மிக விநயமாகவே பேசுகிறான். ராமனோ அவனுடைய அளப்பரிய அன்பினை உணர்கிறான். அவன் கொண்டு வந்த தேனும், மீனும் அசுத்தமான பொருள் களாகப் படவில்லை. ஆம், அதைக் குகன் தன் அன்பினால் அல்லவா பொதிந்து கொண்டு வந்திருக்கிறான். ஆதலால், அவை பவித்திரமான பொருளாகிவிட்டது என்று தன் பக்கலில் உள்ளமுனிவர்களுக்கெல்லாம் அறிவிக்கிறான். 'பரிவினில் தழியது என்னில் பவித்திரம்' என்றே பாராட்டுகிறான். அயோத்தி நிலமகள் நோற்றும் பெறாத பாக்கியத்தைத் தான் பெற்றுவிட விரைகிறான் குகன். தன்னுடனேயே ராமன் தங்கியிருந்து விட வேண்டு