பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - பட்டிமண்டபம்

கிறான். ராமனது தேவைகளையெல்லாம் தன்னால் பூர்த்தி செய்து விடக்கூடும் என்று நம்புகிறான்.

தேன் உளது; தினை உளது

தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் உளது; துணை நாயேம்

உயிர் உள, விளையாடக் கான் உள புனலாடக்

கங்கையும் உளது அன்றே நான் உளதனையும் நீ

இனிதிரு, நட எம்பால்

என்றே உரிமையோடு பேசுகிறான். இதையெல்லாம் மறுத்துவிட்டு குகனது படகு ஒன்றில் ஏறி கங்கையைக் கடக்கிறான் ராமன். அப்போதும் குகன், சரி நீ என்னோடு தங்காவிட்டால் நான் உன்னுடனேயே வந்துவிடுகிறேன் என்கிறான். 'பொருவருமணிமார்பா போதுவன் உடன்' என்றே முனைந்து நடக்கிறான். இந்த குகனது தீராத காதலையறிந்த ராமன், 'தம்பி, நீ என்னோடு வந்து விட்டால் இங்குள்ள நமது கிளைஞர்களை யார்காப்பது? ஆதலால் இங்கேயே தங்கியிரு' என்று சொல்லிவிட்டு, நீயோ என் உயிர் போன்றவன், பக்கத்தில் நிற்கும் இந்த இலக்குவன் உன்தம்பி; சீதையோ உன் கொழுந்தி, நானோ உன் தொழில் உரிமையில் பங்கு கொள்ளுகிறவன் என்று பாராட்டிப் பேசுகிறான். இதைக் கம்பன் சொல்கிறான்:

அன்னவன் உரைகேளா - அமலனும் உரை நேர்வான் என்னுயிர் அணையாய் நீ,

இளவல் உன் இளையான், நண்ணுதல் அவள் நின் கேள், நளிர்கடல் நிலம் எல்லாம்.