பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 45

உன்னுடையது நான் உன்

தொழில் உரிமையில் உள்ளேன்

என்று சொல்லியதோடு அமையாது, முன்னர் நாங்கள்

அண்ணன் தம்பியர் என்று நாலு பேர்தான் இருந்தோம்.

இன்று உன்னையும் சேர்த்து ஐந்து பேராகிவிட்டோம் என்றே சொல்கிறான். -

முன்புள ஒரு நால்வேம்

முடிவுள என உண்ணா

அன்புள இனி நாமோர்

ஐவர்கள் உளரானோம்

என்றே, தான் அவனைத் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டதை அழுத்தமாகவே கூறுகிறான். இப்படித்தான் குகனைத் தன் சகோதரருள் ஒருவனாக ராமன் ஏற்றுக் கொண்டான் என்று கம்பன் காவியம் கூறுகிறது. -

சுக்ரீவன் ராமனை அணுகுகின்றதையும் கம்பன் அழகாகவே சொல்கிறான். சுக்ரீவன் வானர அரசனாம் வாலியின் தம்பி. வாலி தனக்கு சுக்ரீவன் வஞ்சனை செய்து விட்டான் என்று எண்ணி அவனது மனைவியையும் கைப்பற்றிக்கொண்டு, அவனைக் கிஷ்கிந்தை நகரை விட்டே துரத்திவிடுகிறான். வாலியோடு போரிட இயலாத சுக்ரீவன், அமைச்சன் அனுமனோடு கிஷ்கிந்தையை அடுத்த ரிஷ்யமுக பர்வதத்திலே ஒளிந்து வாழ்கிறான். சீதையைத் தேடி வருகின்ற ராமனையும், லக்ஷ்மணனையும் அனுமன் சந்தித்து தன் தலைவனான சுக்ரீவனிடம் அழைத்து வருகிறான். வருகிறவர்கள் அழகர்கள் மாத்திரம் அல்ல நல்ல வீரர்களும் கூட என்று தெளிகிறான் சுக்ரீவன். ஆம், இவர்கள் தேவர்களுக்கு எல்லாம் தேவர்கள், மானுடராய் அவதரித்திருக்கிறார்கள்