பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பட்டிமண்டபம்

என்பதையுமே உணர்கிறான். வாலியோடு தன் பகை முடிய இவர்கள் உதவுவார்கள் என்றே எண்ணுகிறான். ஆகவே ராமன் திருவடிகளிலே சரணம் அடைகிறான்.

சரண் உனை அடைந்தேன்

என்னைத்தாங்குதல் தருமம்

என்றே வேண்டிக் கொள்ளுகிறான். சுக்ரீவன் வரலாற்றையெல்லாம் அனுமன் எடுத்துரைக்கிறான். சிற்றன்னை சொன்னாள் என்பதற்காகப் பெரிய ராஜ்ய பதவியையே தன் தம்பி பரதனுக்குக் கொடுத்து விட்டு வந்த ராமன், தம்பியாகிய சுக்ரீவனை, வாலி, ராஜ்யத்தை விட்டு அடித்துத் துரத்திவிட்டான். அவன் மனைவியை அபகரித்துக் கொண்டான் என்று கேட்டபோது அந்த வாலி பேரில் அசாத்ய கோபம் எழுகிறது. தன்னைப் போலவே துயருறுபவன் என்றதும் அவன் பேரில் ஒரு அன்பு பிறக்கிறது. அந்த அன்பில், அவனையும் தம்பியாக ஏற்றுக்கொள்ளும் ஆவலும் அதிகரிக்கிறது. எப்படி சுக்ரீவனை ஏற்றுக்கொண்டான்ராமன் என்பதைக் கம்பன் சொல்கிறான், -

மற்று இனி உரைப்பது என்னே?

வானிடை மண்ணில் நின்னைச் செற்றார் என்னைச் செற்றார்.

தீயரே எனினும் உன்னோடு உற்றார் எனக்கும் உற்றார்.

உன் கிளை எனது என் காதல் சுற்றம் உன் சுற்றம்

நீ என் உயிர்த்துணைவன் என்றே அவனை அணைத்துக் கொள்கிறான். இப்படித் தான் சுக்ரீவனும் ராமன் தம்பியாக உயர்வடைகிறான்.