பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 47

இனி இந்த விபீஷணன் எப்படி ராமனை வந்து அடைந்தான் என்று பார்க்கலாம். இலங்கையர்கோனான இராவணனது தம்பியாக விபீஷண்ன் வாழ்கிறான். அரக்கனாய்ப் பிறந்தாலும் அந்தணனாகவே வாழ்கிறவன் அவன். இராவணன் தண்டகாரண்யத்திலிருந்து சீதையை எடுத்து வந்து அசோகவனத்தில் சிறை வைத்திருப்பதை ஆதிமுதலே கண்டித்து வருகிறான். சீதையை மீட்டுச் செல்ல ராமன் வானரப்படையோடு வந்து கொண்டி ருக்கிறான் என்பதை அறிந்து இராவணன் தன் மந்திரக் கிழவரை அழைத்து ஆலோசனை செய்கிறான். அங்கும் விபீஷணன் தன் கருத்தை ஆணித்தரமாகத் தெரிவிக் கிறான். சீதையைச் சிறை எடுத்தது புகழ்தரத்தக்க செயல் அல்ல. சீதையை விடுதலை செய்து ராமனிடம் சேர்த்து விடுவதே நல்லது என்று சொல்கிறான்.

இசையும் செய்கையும்

உயர்குலத்து இயற்கையும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையோடும் மடியாது அசைவில் கற்பினாள் அணங்கை விட்டருளுதி, இதன்மேல் விசயம் இல்லெனச் சொல்லினன்

அறிஞரில் மிக்கோன் என்று கம்பன் பாடுகிறான். இந்த அறிவுரையை ஏற்க மறுத்து, விபீஷணனைக் கடிந்து பேசுகிறான் இராவணன். இந்தச் சூழ்நிலையில் விபீஷணன் இனி இந்த அண்ண னுடன் இருந்து பயனில்லை என்று கருதி ராமன் தங்கி யிருக்கின்ற பாசறை வந்து சேர்கிறான். ராமனும், அனுமன் ஆலோசனைப்படியே தன்னிடம் அடைக்கலம் புகுந்த