பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

惑” *

Liபட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம் கம்பராமாயணம் ஆகிய நூல்களில் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் "மகத நல் நாட்டு, வாள்வாய், வேந்தன் பகை புறத்துக் கொடுத்த பட்டி மண்டபம் (5-102) என்பதனால் பட்டிமண்டபம் என்பதைப் பெயர் அளவில் தெரிந்து கொள்ளுகிறோம்.

மணிமேகலையில் 'பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்’ (1-16) என்றமையால் பட்டி மண்டபத்துக்கு என்று ஏதோ ஒரு முறை அல்லது விதி இருந்திருக்கிறது என்பதை நாம் உணருகிறோம்.

திருவாசகத்தில், பட்டி மண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே’ (சதகம் -41) என்றதனால் பட்டிமண்டபத்தைச் சேர் வதற்குப் பெருந்தகுதி வேண்டும் என்பது புலனாகிறது.

r கம்பராமாயணத்தில், 'பன்ன அரும் கலைதெரி பட்டி மண்டபம்" என்பதனால் திரும்பத் திரும்பச் சொல்வ தனாலே உணர்த்த முடியாத கலைகளை ஆராயும் இடமே பட்டி மண்டபம் என்று ஒருவாறாகத் தெரிந்து கொள்ளுகிறோம். -

முற்காலத்தில் பட்டிமண்டபத்தின் பணியும், பயனும், விதியும் எத்தன்மையினவாய் இருந்தன என்பது நாம்