பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பட்டிமண்டபம்

விபீஷணனை அணைத்துத் தன் ஆறாவது தம்பியாக ஏற்றுக் கொள்கிறான். அப்போதுதான்

எம்முழை அன்பின் வந்த

அகனமர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை என்று கம்புன் பாடுகிறான். இப்படித்தான் குகன், சுக்ரீவன், விபீஷணன் மூவரையும் ராமன் தம்பியாக ஏற்றுக் கொண்டான் என்று காவியம் கூறுகிறது.

இந்த வரலாற்றைத்தான் இம்மூவர்கட்சியில் வாதாடிய அறிஞர்கள் விரிவாக விளக்கமாக எடுத்துரைத்தார்கள். மூவரும் ராமனது உடன்பிறவாத் தம்பியாக விளங்கி னார்கள் என்று வெள்ளிடைமலை. இந்த மூவரில் யார் உயர்ந்த தம்பி என்பது முடிவு கட்ட வேண்டியதே இனி நான் செய்ய வேண்டிய பணி. கம்பன் சொல்வதைப் படிக்கும்போதே தெரிந்து விடும் இவர்களில் யார் உயர்ந்த தம்பி என்று. சுக்ரீவனும் விபீஷணனும் தங்கள் தங்கள் அண்ணன்மாரை விட்டு வந்து ராமனிடம் சரண் புகுந்தவர்கள். இவர்களில் சுக்ரீவனோ தன் அண்ணன் வாலியோடு பகையே கொண்டவன். அவனை வெல் வதற்கும், ஏன், கொல்வதற்குமே காலமும், இடமும், துணையையும் எதிர்பார்த்து இருந்தான். ராமனைப் போன்ற வீரன் ஒருவன் வந்திருக்கிறான் என்ற உடனேயே அவனிடம் சரண் புகுகிறான். தன்னைக்காக்க வேண்டும் என்று அபயக் குரலையே எழுப்புகிறான். ராமனைத் தன் துணைவன்ாகக் கொள்ளு முன்பு அவன் ஆற்றலைக் கூடச் சந்தேகிக்கிறான். அதற்காக மராமரங்களை எய்யச்