பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 49

சொல்லுகிறான். துந்துபியின் எலும்பைத் துக்கி எறியச் சொல்லுகிறான். இவனுக்கு ராமனிடத்து அளப்பரிய அன்பிருந்தது என்று சொல்ல இயலாது. இது மட்டுமல்ல. வாலியைக் கொன்று கிஷ்கிந்தை ராஜ்யத்தையே அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைக்கிறான் ராமன். கார்காலம் என்ற சாக்கில் உடனே சீதையைத் தேட ஆள் அனுப்ப முடியவில்லை. கார்காலம் முடிந்த உடனாவது அந்த நன்றியை நினைத்துத் தன் பணியைத்துவக்கினானா என்றால், இல்லை. கேளிக்கைகளிலே அமிழ்ந்து கிடக்கிறான். இதைக் கம்பனே சொல்கிறான், இராமன் வாயிலாக:- -

பெறல் அருந்திருப்பெற்று உதவி பெரும்

திறம் நினைந்திலன், சீர்மையில தீர்ந்தான் அறம் மறந்தவன் அன்பு கிடக்க, நம்

மறம் அறிந்திலன், வாழ்வின் மயங்கினான்

என்றும் - நன்றி கொன்று அருநட்பின் நார் அறுத்து ஒன்றும் மெய்மை சிதைத்து உரை பொய்த்தான் என்றும் குமுறுகிறான். சுக்ரீவன் காரியவாதி. தன் காரியம் முடிந்ததும் செய்த நன்றியை மறந்து விடுகிறான். இவனை உயர்ந்த தம்பி என்று கூறுதல் இயலாது தானே? இராவணனோடு ஏற்ற போரில் ராமனுக்குப் பக்கத் துணையாயிருந்தான். இராவணன் மகுடங்களையெல் லாம் பறித்தான். கும் பகர்ணன் மூக்கையே கடித்துக் குதறினான். ஆதலால் அவன் அன்பு ஆற்றல் மிக்க அன்பு என்று விவாதிக்கின்றனர் சுக் ரீவன் கட்சியார். இந்த ஆற்றலும், வலியும் அவன் நன்றி கொன்ற தன்மையில் அடியோடே அழிந்து போகிறது. ஆதலால் முதலில்