பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பட்டிமண்டபம்

கக்ரீவனை விவாதத்திலிருந்து அகற்றிவிடலாம் உயர்ந்த தம்பி அல்ல என்று. - -

இனி விபீஷணனது தன்மையைக் கவனிக்கலாம். கம்பன் விபீஷணனைஓர் அற்புதமான பாத்திரமாகத்தான் சிருஷ்டி செய்திருக்கிறான். மேதாவிகட்கெல்லாம் மேலானவன். அறிவின் உம்பரான், கோதிலாதான்-சால்பு மிக்கான் என்றெல்லாம் கம்பன் அவனைப் பாராட்டு கிறான். இவை காரணமாக அவன் உயர்ந்த பண்புகள் நிறைந்தவன் என்று கொள்ளலாம். ஆம், நீதியால் வந்த நெடுந்தரும நெறியிலே வாழ்ந்தவன் அவன். சாதியால் வந்த சிறுநெறியை அறியாதவன். இப்படி எல்லாம் இருந்தாலும் அவன் சிறந்த தம்பி யாவானா? என்பது கேள்வி. ராமனிடம் வந்து அடைக்கலம் புகும்போது அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் இலங்கை மகுடம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இல்லா திருந்தது என்று சொல்ல இயலாது. அருத்தியும் அரசின் மேற்றே என்று கம்பன் கூறும் போது நாம் அவனது எண்ணங்களைச்சந்தேகிக்கவே ஆரம்பித்து விடுகிறோம். ராமன் இராவணனோடு ஏற்று நின்ற போரில் விபீஷணன் ராமனுக்கு எவ்வளவோ துணைபுரிந்திருக்கிறான். இந்திர சித்தனை இலக்குவன் வென்று பகை முடித்தபோது இது வீடணன் தந்தவெற்றி என்றே பாராட்டுகின்றான் ராமன். வீபிஷணன் அன்பு, ஞானம் கலந்த ஒன்று என்றே வாதிடு கின்றனர் அவன் கட்சியில் பேசுபவர்கள். எப்போது ஞானம் முந்திக் கொள்கின்றதோ அப்போது அன்பு குறைந்து விடுகிறது. ஆம், அவனுக்கு நீதிக்குப்பின் தான் பாசம், பாசத்திற்குப் பின் நீதி அல்ல. பாசம் எப்போது பின்னடித்து விடுகிறதோ, அதன் பின் அவன் உயர்ந்த தம்பியாக ஆவது எங்ங்னம்? - -