பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 51

இனி எஞ்சி நிற்பவன் குகனே. அவன் அன்பே பயன் கருதாத அன்பு. எதையும் வேண்டி அவன் ராமனை அடையவில்லை. உன் சரணம் என்றோ, உன் அடைக் கலம் என்றோ கூறவில்லை ராமனிடம். ராமனோடு உளங் கலந்து, அவனுடன் ஒன்றி வருகிறான். அவனு டைய அன்பைக் கரைகாணாக் காதல் என்றே கம்பன் கூறுகிறான். ராமன் மாத்திரம் தானா இவனைத் தம்பி என்று ஏற்றுக் கொள்கிறான். இன் துணைவன் ராக வனுக்கு, இலக்குவற்கும் இளையவர்க்கும் எனக்கும் மூத்தான் என்றே பரதனும் அவனை அண்ணனாக ஏற்றுக் கொள்கிறான். இதைக் கேட்ட கோசலையும்,

நைவீரலின் மைந்தீர்

இனித்துயரால் நாடிறந்து - காடு நோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும்

நலமாயிற்றாம் அன்றே விலங்கல் திண்தோள்

கைவீரக் களிறனைய காளை இவன் தன்னோடும் கலந்துநீவிர் - ஐவீரும் ஒரு வீராய் அகலிடத்தை நெடுங்காலம்

அளித்தீர். - என்றே கூறுகிறாள். அசோகவனத்தில் சிறையிருக்கிற சீதையும் ராமன் குகனைத் தம்பியென்று ஏற்றுக் கொண்டதை நினைக்கிறாள்.

ஆழநீர்க்கங்கை அம்பி கடாவிய

ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி, நீ