பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

4

இராம சேவையில் தலை நின்றவர் யார்?

இலக்குவனா?

அனுமனா? விபீஷணனா?

இராம காதையில் ராமனை நடுநாயகமாக வைத்து மற்றப் பாத்திரங்கள் எல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி வருவதையே பார்க்கிறோம். அமரர் பால் நாடார்.அவர்கள் ஒரு தடவை சொன்னார்கள். 'இராமகாதையே ராமன் என்னும் ரவிகுல திலகனைச்சுற்றியே, எப்படி சூரியனைச் சுற்றி மற்ற கிரஹங்கள் சுழலுகின்றனவோ அப்படியே ராமனது சேவைக்கென்றே இலக்குவன், பரதன், சத்ருக்கனன் முதலிய தம்பியர் மாத்திரம் அல்ல குகன், சுக்ரீவன், அனுமன், விபீஷணன் முதலியோரும் படைக்கப்பட்டிருக்கின்றனரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. மக்கள், தேவர், வானரர் எல்லோருமே ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு நிற்கின்றனர். இப்படி நிற்கின்றவர்களில் மூன்று பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து அதில் சேவை செய்தவர்களில் சிறந்து நிற்பவர்