பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பட்டிமண்டபம்

யார் என்று விவாதிப்பதற்கே இப்பட்டிமன்றம் கூடியிருக்கிறது. வழக்கம்போல் கட்சிக்கு மூன்று பேர் வாதமிட்டிருக்கின்றனர். எல்லோருமே கவிச்சக்கரவர்த்தி கம்பனது இராமாயணத்தை நன்கு கற்றவர்கள். அவரவர்கள் கட்சிக்கு நல்ல சான்றுகளைக் காட்டி வாதிட்டிருக்கின்றனர். கம்பனுமே கொஞ்சமும் வஞ்சகமில்லாமல் வேண்டும் சான்றுகளை ஒவ்வொரு வருக்குமே அள்ளி அள்ளித் தந்திருக்கிறான். இந்த வாதப்பிரதிவாதங்களையெல்லாம் கேட்டபின் இதில் தீர்ப்புக்கூறும் நிர்ப்பந்தம் எனக்கு நேர்ந்திருக்கிறது. கம்பன் துணை கொண்டே அத்தீர்ப்பைக் கூற முயல்கின்றேன் நான்.

முதலில் இம்மூவர் செய்த சேவையையும் கவிச்

சக்கரவர்த்தி கம்பன் எவ்வாறு கூறுகின்றான் என்பதைப் பார்க்கலாம். இலக்குவன் ராமன் உடன் பிறந்தவன், ஒன்றாகவே வளர்ந்தவன். இளவயதிலிருந்தே அவனுடன் இணைபிரியாது வாழ்ந்தவன். விசுவாமித்திர முனிவர் அயோத்திக்கு வந்து தசர்தனிடம் அவன் பிள்ளைகளில் ‘கரியசெம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்றுதான் கேட்கிறார். ஆம், தன் வேள்விக்குப் பாதுகாப்பாக ராமன் ஒருவனே போதும் என்று எண்ணுகிறான் முனிவன். தசரதனும் ராமனை அனுப்ப இசைகிறான். அவனை அழைத்துவர ஆள் அனுப்புகிறான். ஆனால் ராமன் புறப்படும்போது ஒருவரும் ஏவாமலேயே இலக்குவனும் வில்லை ஏந்திக்கொண்டு புறப்படத் தயாராகி விடுகிறான். . . . -

வந்த நம்பியைத் தம்பிதன்னோடும் முந்தை நான் மறை முனிக்குக் காட்டி