பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் - 55

முனிவருடன் இருவரையும் சேர்த்தே அனுப்பி வைக்கிறான் தசரதன். அன்றே தொடங்கிவிடுகிறது இலக்குவனது ராம சேவை. முனிவருடன் சென்று ராமன் தாடகையை வதைத்தபோதும், பின்னர் விசுவாமித்திர முனிவன் வேள்வி காத்தபோதும் உடன் இருந்து கண்ணினைக் காக்கின்ற இமையில் காக்கின்றான் இலக்குவன். சரி, மிதிலை சென்று ராமன் சீதையையும் இலக்குவன் ஊர்மிளையையும் மணந்து அயோத்தி திரும்புகின்றனர். பின்னர், கைகேயி தசரதனிடம் பெற்ற வரங்களால் ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள விட்டுவிட்டு, தாழிரு சடைகள் தாங்கி தாங்கரும் தவமேற்கொண்டு கானாளப் புறப்படுகின்றபோதும், ராமனுக்கு முந்தியே காட்டுக்குப் புறப்பட்டு விடு கின்றான் இலக்குவன். தன்னுடைய தாய், தந்தை, தனயன், நாயகன் எல்லாம் அவனே என்னும் படி இலக்குவன் ராம சேவையில் ஈடுபடுகிறான்.

நல் தாதையும் நீ, தனி நாயகன் நீ, வயிற்றில் பெற்றாயும் நீயே பிறரில்லை என்று தானே அப்போது ராமனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறான் இலக்குவன். - - -

செல்லும் வழியிலே கங்கை குறுக்கிட்டால் குகன் தோணி கொண்டுவந்து அக்கரை சேர்க்கிறான். ஆனால் மேலும் நடக்கும்போது ஒரு கானாறு குறுக்கிடுகின்றது. அங்கு குகனைப்போல் ஒரு படகுடன் வேட்டுவத் தலை வன் காத்து நிற்கவில்லை. ஆற்றிலோ பெருவெள்ளம். ஆற்றைக் கடப்பது எப்படி என்று ராமன் அலமந்து நிற்கின்றபோது இலக்குவன் பக்கத்தில் உள்ள புதரிலிருந்து மூங்கில்களை வெட்டி அங்கு முளைத்துக்