பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பட்டிமண்டபம்

கிடந்த கொடிகளால் ஒரு தெப்பமே கட்டி விடுகிறான். அந்தத் தெப்பத்தைத் தள்ளி அக்கரை கொண்டு சேர்க்க ஆள் இல்லை என்பதையும் கண்டு, அத்தெப்பத்தில் ராமனையும், சீதையையும் ஏற்றி தான் ஆற்றின் வெள்ளத்திலே நீந்திக்கொண்டு அத்தெப்பத்தை அக்கரை சேர்க்கிறான். இத்தனையையும் உடன் இருந்து கண்டவன்போல் கம்பனும் அழகாக சொல்லுகிறான் ஒரு பாட்டில், -

வாங்கு வேய்ங்கழை துணித்தனன்

மாணையின் கொடியால் ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து

அதன்மேல் உம்பரின் உலம்போல் வீங்குதோள் அண்ணல் தேவியோடு

இனிது வீற்றிருப்ப நீங்கினான் அந்த நெடுநதி இருகையால் நீந்தி

என்பதுதானே கம்பசித்திரம். இப்ப்டி எத்தனை எத்தனையோ சேவைகள். -

தண்டகாரண்யத்தில் பஞ்சவடி சென்று சேர்கிறார்கள் மூவரும். அங்கு ஒரு பர்ணசாலை கட்ட வேண்டி யிருக்கிறது. இலக்குவனே அப்பணியையும் செய்து, முடிககிறான். அவன்பர்ணசாலை கட்டும் அழகை கம்பன் மூன்று பாடல்களில் வர்ணிக்கிறான். மூங்கிலையும் நாணலின் புல்லையுமே கொண்டு காட்டுக் கொடிகளின் துணையுடன் எத்தனை அழகான பர்ணசாலையை, எவ்வளவு திறமையுடன் அமைக்கிறான் என்று கம்பன் விவரிக்கின்றபோது அடடே இவன் ஒரு பெரிய இஞ்சினியராகப் பிறக்க வேண்டியவன் அல்லவா என்று