பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 57

எண்ணத் தோன்றுகிறது நமக்கு ஆனால் நம்மையும் முந்திக்கொண்டு ராமன், தம்பி, நீ என்று கற்றனை இதுபோல் பர்ணசாலை கட்ட2 என்றே கேட்டு விடுகிறான். .

இராம ச்ேவையில் இலக்குவன் மேலும் மேலும் உயர்ந்து விகசிக்கிறான். கங்கைக் கரையிலே ராமனும், சீதையும் துயிலும்போது, இரவு முழுவதும் விழித்திருந்து இலக்குவன் காவல் காத்த செயலை குகன் சொல்லிச் சொல்லி மகிழ்கிறானே!

அல்லையாண்டமைந்தமேனி

அழகனும் அவளும் துஞ்ச வில்லையூன்றிய கையொடும்

வெய்துயிர்ப் பொடும் வீரன் கல்லையாண்டமைந்த தோளாய் கண்கள் நீர் சொரியக்கங்குல் எல்லை காண்பளவும் நின்றான்

இமைப்பிலன் நயனம்

என்று குக்ன் பரதனிடம் சொன்னதாகக் கம்பன் பாடிய பாடல்தான் பிரசித்தமானதாயிற்றே!

இன்னும் ராமன் சீதையைப் பிரிந்த பின்னர், அவனுக்கு வேண்டும் சிசுருவுைகளை எல்லாம் செய்து, அவனுடன் இலங்கைப் போர்க்களத்திற்கும் சென்று, அங்கு மிக்க வலியுடைய இந்திரசித்தனை நிகும்பலைப் போரில் வென்று அவன் உயிர் குடிக்கவும் துணை நிற்கிறானே. இந்திரசித்தன் தலையைக் கொண்டு வந்து ராமன் காலடியில், தம்பி,இலக்குவன் போட்டதும், சிறையி லிருந்த சீதையையே மீட்டு விட்டதுபோல் குதூகலித் தானேராமன். . . . .