பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டறியுமாறில்லை இன்று, எனினும் மேலும் கண்ட வற்றால், ஒருவகையான ஆராய்ச்சி மேடையாகவே பட்டிமண்டபம் விளங்கிற்று என்று கொள்வது பொருத்தமே. அது இன்று ஒரு விவாத அரங்காகவே மிளிர் கிறது. - - -

முதன் முதலாக இது காரைக்குடிக் கம்பன் திருநாளில் தொடங்கப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகட்கும் மேலாகக் கம்பன் திருநாளின் ஒர் அங்கமாகப் பட்டி மண்டபம் விளங்கி வருகிறது. இது பின்னர் தமிழக மெங்கும் பரவி வளம் சுரந்து கொண்டிருக்கிறது. இன்று பல இலக்கிய சமய - விழாக்களில் எல்லாம் பட்டி மண்டபம் ஓர் இன்றியமையாத உறுப்பு எனக் கருதப் பட்டுவருகிறது என்பதைச் சொல்லவா வேண்டும்?

உரையரங்கு, கருத்தரங்கு, கவியரங்கு ஆகியவற்றுக்கு வருகின்றவர்களினும் அதிகமானவர்கள் பட்டி மண்டபத்திற்கே வந்து கூடுகிறார்கள். அப்படி வந்து அவைகளை நிறைத்துக் கொண்டிருப்பவர்கள் காட்டும் ஆர்வத்தையும், பரபரப்பையும் நோக்கினால், இந் நிகழ்ச்சி கேள்விச் செல்வர்களை எவ்வளவு கவர்ந் திருக்கிறது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளலாம்.

எவ்வளவுதான் ஈடுபாடும், ஆர்வமும் கொண்டு மக்கள் திரண்டு வந்தாலும், பயன் அளவு கருதி ஆறுதலும், மகிழ்வும் கொண்டாலும், எதற்கும் ஒரு ஒழுங்கும் கால வரம்பும் வேண்டுமல்லவா? ஆகவே, இன்றைய பட்டி மண்டபம் தனக்கென சில வரையறைகளைக் கொண்டே பயன் கொழித்து வருகிறது.