பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பட்டிமண்டபம்

கம்பமதத்துக் களியானை

காவல் சனகன் பெற்றெடுத்த கொம்பும் என்பால் வந்து

குறுகினன் நன்றெனக் குளிர்ந்தேன் வம்புசெறி மலர்க் கோயில் -

மறையோன் படைத்த மாநிலத்தில் தம்பி உடையான் பகை அஞ்சான்

என்னும் மாற்றம் தந்தனையால் என்று தன்தம்பியின் சேவையைக் காப்பியத் தலைவன் வாயாரப் போற்றுகின்றானே இராவணனை வதம் செய்து வெற்றியோடு அயோத்தி திரும்பியபின் கம்பனுக்கே ஒரு ஐயம் எழுகிறது. காட்டிலே ராமனுடன் இருந்து சேவை செய்த இலக்குவன் நலிந்தது அதிகமா, இல்லை, நாட்டிலே தவமிருந்து உடல் நலிந்து நிற்கிறானே பரதன் அவன் வலிவு அதிகமா என்று எண்ணுகிறான்.

காடுறைந்து உலைந்த மெய்யோ

கையறு கவலை கூறத் நாடு உறைந்து உலைந்த மெய்யோ

நைந்தது.உலகம் நைய என்றெல்லாம் பாடுகின்றபோது கம்பன் இலக்குவனது சேவையை எவ்வாறு போற்றுகின்றான் என்று சொல்லவா வேண்டும். இலக்குவன் கட்சியில் நின்று பேசியவர்கள் இத்தனை சான்றையும் இன்னும் இதற்கு மேலும் கூறி வாதிட்டிருக்கிறார்கள். r -

அனுமன் ராமனுடன் இடைவழியில் வந்து சேர்கின்ற வனே. கிஷ்கிந்தையில்தான் அவன் ராமனைக் காண் கிறான்; கண்டது முதல் இராமசேவையில் ஈடுபட்டு