பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 59

நிற்கிறான். அவனைக் கண்ட உடனேயே அவன் பெருமை களை எல்லாம் தெரிந்து கொள்கிறான் ராமன்.

"இல்லாத உலகத்து எங்கும்

இங்கிவன் இசைகள் கூறக் கல்லாத கலையும் வேதக் கடலுமே”

என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே?

யார் கொல் இச்சொல்லின் செல்வன்.

என்று ஒரு நல்ல பட்டமே கட்டி அவனைப் பாராட்டுகிறான். அதன்பின் நம்பிக்கையான சேவைக்கு ஏற்றவன் அவனே என்று கண்டு சீதையைத் தேடும் பணியில் முக்கியமான பங்கை அவனுக்கே கொடுக் கிறான். அவன் சீதையைக் கட்டாயம் கண்டு வருவான் என்ற நம்பிக்கையில்தான், அவனிடம் கணையாழி யையும் கொடுத்து அனுப்புகிறான். சீதையைக் கட்டாயம் 'கண்டு வருவான்’ என்று காகுத்தன் நினைத்தான். 'கண்டு விட்டால் கொண்டே வந்து விடுவான்' என்று அவன் பூரண ஆற்றலையும் அறிந்த சுக்ரீவனும் எண்ணுகிறான்.

இந்த அனுமன் கடல் கடக்கிறான். இலங்கை செல் கிறான். அசோக வனத்திலும் நுழைகிறான். சீதையைக் காண்கிறான். அவளிடம்தான் தன்னை ஒரு சேவகன் என்றே அழகாக அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

இலங்கையில் ராமன் ராவணனுடன் ஏற்றிருந்த போரில்தான் இந்த அனுமன் எவ்வளவு சேவை செய்தி ருக்கிறான். இந்திரசித்தன் ஏவிய பிரமாத்திரத்தால் ராமன் இலக்குவன் உள்பட எல்லா வானர வீரர்களும் கட்டுப்பட்டுக் கிடந்தபோது திரும்பவும் பாரதத்திற்கே தாவி வந்து ம்ருத்துவ மலையையே வேறொடும்