பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பட்டிமண்டபம்

பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்று அவர்களுக்கு எல்லாம் புத்துயிர்கொடுத்திருக்கிறானே. அதனால்தானே ராமனும் அனுமனைத் தன் தந்தையாகவே மதித்து பாராட்டுகிறான். * , மண்ணில் தோன்றினோம், முன்னர்

மாண்டு போய் நின்னில் தோன்றிய நெறியில்

தோன்றினோம்

என்று தன்னை இப்போது பெற்றெடுத்தவன் அனுமனே என்றல்லவா ஒப்புக் கொள்கிறான். இப்படி எல்லாம் அரிய சேவை செய்தவனுக்கு நித்யத் வம் வழங்கி என்றும் சிரஞ்சீவியாகவே வாழ வைத்து விடு கிறானே! இதை எல்லாம் எடுத்துக் காட்டி வாதாடினார்கள் அனுமன் கட்சியார். -

வீடணன் கட்சியாரும் சளைக்கவில்லை. ஏதோ

கடைசிக் காலத்தில்தான் வீடணன் ராமனோடு வந்து சேர்கிறான் என்றாலும், இராம்சேவையில் அவன் யாருக்கும் குறைந்தவனாக இல்லை. இராவணனுடைய கடைசித் தம்பி வீடணன், அரக்கர் குலத்தில் பிறந்த வனானாலும் அந்தணனாகவே வாழ்ந்தவன். இலங்கை யில் புகுந்து சீதையைத் தேடிவரும் அனுமன் வீடணன் மனை புகுந்தபோது, அவனை

வேந்தர், வேதியர் மேல் உளோர்

கீழ் உளோர் விரும்பப்

போந்த புண்ணியனாகவே

காண்கின்றான். பின்னர் அவனை அனுமனே 'குற்றம் இல்லது ஒர் குணத்தினன் இவன் என்றே பாராட்டும்