பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 61

பேறு பெறுகிறான். அந்த வீடணனது மகளாகிய திரிசடையே அசோகவனத்தில் சீதைக்கு உற்ற தோழியாக இருந்து சேவை செய்கிறாள். இந்த வீடணனுக்கு தன் அண்ணனிடம் அபிமானம் இருந்தாலும் அவன் செய்யும் செயலுக்கு உடனாகி இருக்க முடியவில்லை. இராவணன் சீதையைக் கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறை வைத்திருப்பதைச் சமயம் வாய்க்கும் போதெல்லாம் கண்டிக்கிறான். -

இசையும் செல்வமும் உயர்

குலத்து இயற்கையும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது

அசைவு இல் கற்பின்

அவ் வணங்கை விட்டு அருளாதி

என்றே உபதேசிக்கிறான். இந்த அறிவுரைகளை எல்லாம் ‘பிச்சர் சொல்லுவ சொல்லினை என்று இராவணன் ஒதுக்கிவிட்டு வீடணனை விரட்டியபோது அதற்குமேல் இராவணனுடன் இருந்து பயனில்லை என்று கருதி ராமனிடம் சென்று சரணாகதி அடை கின்றான். அடைக்கலம் என்று வந்த வீடணனை ராமனும் ஏற்று அருள்புரிகின்றான். அது முதல் இராம சேவை யிலேயே கழிக்கின்றான் வீடணன், இரத்த பாசத்தை யெல்லாம் ஒதுக்கி விட்டு இராம சேவையிலேயே ஈடுபடுகிறான். நீதியால் வந்த நெடுந் தரும நெறி யெல்லால் சதியால் வந்த சிறு நெறியை அறியாத வனாகவே வாழ்கிறான். அரக்கர் செய்யும் மாயங்களை எல்லாம் ராமனுக்கு எடுத்துச் சொல்கிறான். நிகும்பலை யாகம் செய்யும் இந்திரசித்தனது மாயைகளை எல்லாம் வென்று இலக்குவன் இந்திரசித்தனை முடிப்பதற்குப்