பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - பட்டிமண்டபம்

பெரிதும் உதவுகின்றான். இதனால் அன்றோ, இந்திர சித்தனை வதைத்த இலக்குவனைப் பார்த்து இது வீடணன் தந்த வெற்றி - என்றே பாராட்டி மகிழ்கிறான் ராமன். இப்படி எல்லாம் வீடணன் இராமசேவையில்திளைக்கிறான் என்பது வீடணன் கட்சியார் வாதம்.

பார்க்கப் போனால், இலக்குவன், அனுமன், வீடணன் மூவருமே இராமசேவையில் சிறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். என்றாலும், இந்த மூவருள்ளும் எவரது சேவை மிக மிக உயர்ந்தது என்று தீர்மானிப்பதே இப்பட்டிமன்றத்தின் குறிக்கோள். - -

சேவை செய்வதிலே, சேவை செய்கிறோம் என்ற உணர்ச்சியே இல்லாமல் சேவை செய்வதுதான் உயர்ந்த சேவையாகக் கருதப்படும். மேலும் சேவைக்காகவே வாழ்கிற மனநிலை உடையவராக இருப்பவரே சிறந்த சேவை செய்பவர் என்று கருதப்படுவர். இந்த உரைகல்லை வைத்துக் கொண்டு இந்த மூவர் சேவை யையும் எடை போட்டுப் பார்க்கலாம். வீடணன் இராம சேவையில் ஈடுபடுமுன் இராவண சேவையில் இருந்த வன். இராவணன் தவறு செயகிறான் என்று தெரிந்த பின்னரே அவன் அவனை விட்டு விட்டு ராமனிடம் ஒடுகிறான்.

இராவணன் இந்திரசித்து முதலிய அரக்கர் செய்யும் மாயங்களை எல்லாம் எடுத்துக் கூறுகிறான்.ஒருக்கால் ராமன் ஏதாவது தப்புத் தவறுகள் செய்து விட்டால் அவனையும் விட்டு ஒடத் தயாராகவே இருப்பவன் அவன். சேவை அவனது லட்சியம் அன்று. நீதியால் வந்த நெடுந்தரும நெறியிலே நிற்பதே லட்சியம். அரச குடும்பத்தில் மூவுலகாளும் இலங்கேஸ்வரன்தம்பியாகப்