பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 63

பிறந்த அவனிடம் சேவை செய்யும் உணர்ச்சி இல்லை. இருக்கிற சூழ்நிலையில் இராமசேவை செய்வதே தான் உய்வதற்கு வழி என்று கருதுகிறான். அப்படி சேவை செய்வதன் மூலம் இலங்கை அரசை விடப் பெரிய அரசான வீட்டரசு கிடைக்கும் என நினைக்கிறான். அதற்காகவே ராமனிடம் வந்து அடைக்கலம் புகு' கின்றான். ஆதலால் இராம சேவையில் அவன் தலை நின்றவன் என்று கூறுதல் இயலாது. ஆதலால் விவாதத்திலிருந்து முதலில் அவனை விலக்கி விடலாம்.

அனுமனும் இலக்குவனும் தன்னலமற்ற சேவை செய்தவர்கள்தாம். அனுமன் என்ற ஒருவன் இல்லா விட்டால் ராமன் இராவணனை வெற்றி கண்டிருப்பானா என்பதே சந்தேகம்தான். என்றாலும், தான் சேவை செய்யப் பிறந்தவன் என்ற எண்ணமும் உணர்வும் அவனிடம் இருக்கிறது. அதை வாய் விட்டு விளம் பரப்படுத்திக் கொள்ளவும் செய்கிறான்.

வண்ணக் கடலின் கிடைகிடந்த

மணலின் பலரால் வானரங்கள். எண்ணற்கு அரிய படைத்தலைவர்

இராமற்கு அடியார், யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்

ஏவல் கூவல் பணி செய்வேன். என்றே தன்னைச்சீதையிடம் அறிமுகப்படுத்திக்கொள் கிறான். நான் இராமசேவை செய்கிறவன் என்பதிலேயே பெருமை கொள்கிறவனாக வாழ்கிறான் அவன். - ஆனால் இலக்குவனோதம்பி என்னும் படிக்கு அன்றி அடியாரின் ஏவல் செய்கிறான். சேவை செய்கிறோம் என்னும் உணர்வே அற்று, சேவையிலேயே ஒன்றி