பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பட்டிமண்டபம்

விடுகிறான். கங்கைக் கரையில் ராமனும் சீதையும் படுத்துத் தூங்கினாலும் சரி, இல்லை பஞ்சவடிப் பர்ண சாலையில் இருந்தாலும் சரி, வில்லை ஊன்றிய கையொடும் வெய்துயிர்ப்பொடும் கங்குல் எல்லை காண்பளவும் நின்று காவல் புரிந்து தொண்டு செய்கிறான். ஆற்றைக்கடக்க வேண்டுமா? இல்லை பர்ணசாலை கட் வேண்டுமா? இல்லை, பகைவர்களை முடித்து வெற்றி சூடவேண்டுமா? எல்லா சேவையையும் சேவை செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், கர்மமே கண்ணாக இருந்து செய்கிறான். தான் செய்கிற பணியை எல்லாம் பிறர் அறிய வேண்டும் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதுமில்லை. சித்திரகூடத்தில் இலக்குவன் பர்ணசாலை கட்டியதும் ராமன் அதைக் கண்டு, - -

குன்றுபோலக் குவவிய தோளினாய் என்று கற்றனை நீ இதுபோல் என்று கண்ணிரே வடித்து விடுகிறான். இலக்குவனது சேவையை ராமன் எப்படி மதிக்கிறான் என்பதை,

மேவுகாணம் மிதிலையர் கோன்மகள்

பூவின் மெல்லிய பாதமும் போந்தன தா இல் எம்பிகை சாலை சமைத்தன

யாவை யாதும் இலர்க்கு இயையாதவே என்று பாராட்டுவது ஒன்றே போதுமே, இராம சேவையில் தலை நின்றவன் இலக்குவனே என்பதற்கு. அவனைத் தானே வைஷ்ணவப் பெரியோர்களும் கைங்கர்ய லட்சுமி என்று பாராட்டுகிறார்கள். ஆதலால் ராமசேவையில் தலை நின்றவன் இலக்குவனே என்று தீர்ப்புக் கூறுகிறேன் நான்.