பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

5

தாயன்யில் தலை நின்றவர் யார்?

கோசலையா?

கைகேயியா?

சுமத்திரையா?

இன்று இந்த பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள ஆறு தாய்ம்ார்களும் பன்னிரெண்டு தந்தைமார்களும் வந்திருக்கின்றனர். உண்மையிலேயே தாயன்பைப்பற்றிப் பேசத் தகுதி உடையவர்கள்தாய்மார்களே. தந்தை மாரோ ஏதோ வந்தோம் போனோம் என்ற அள்வில்தான் விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடும். பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்ற தாய்மார்க்குத்தானே தெரியும் தன் குழந்தையின் அருமை. ஆதலால் தன் குழந்தை களிடம் அன்பு செலுத்தாததாயார் உலகிலேயே இருத்தல் இயலாது. அழகற்ற குழந்தையாகவோ, அறிவற்ற குழந்தையாகவோ, இல்லை உடலிலோ உள்ளத்திலோ ஊனம் உற்ற குழந்தையாக இருந்தாலும் பெற்ற தாய்க்கு அதனிடம் அன்பு இருக்கத்தான் செய்யும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுதானே பழமொழி.

கவிச்சக்கரவர்த்தி கம்பனது காவியத்தில் வருகின்ற தாயர் பலர். ராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன்