பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பட்டிமண்டபம்

என்ற நால் வரையும் பெற்றெடுத்த தாய் மூவர். இந்திரசித்தனைப் பெற்றெடுத்த தாய் மண்டோதரி, அங்கதனைப் பெற்றெடுத்த தாய் தாரை என்று ஐந்து தாயார்களைப் பற்றியும் கம்பன் பேசி இருக்கிறான். என்றாலும் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டவர்கள் சக்கரவர்த்தி தசரதனது மனைவியர். ராமனையும் அவன் சகோதரர்களையும் பெற்றெடுத்த தாயாராம் கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூவருமே. இதில் ஒரு சிறப்பு என்ன என்றால் இந்த மூவரும் ஒரு கணவனின் மனைவியராக இருந்தவர்கள். இவர்கள் எல்லாம் சக்களத்திகள். இவர்கள் மூவரும் தன் பிள்ளை வேறு, தன் சக்களத்திப் பிள்ளை வேறு என்ற உணர்ச்சியில்லாமல் அன்பு காட்டிய தாயர். நமக்குத் தெரியும் இவ்வுலகில் மாற்றாந் தாயார் தம் மூத்தாளின் பிள்ளைகளிடம் எவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று. அப்படி இருக்கும்போது இந்தத் தாயார் மூவரும் தன் பிள்ளைகளிடம் காட்டிய அன்பைவிட அதிகமான அன்பையே தன் மாற்றாளின் பிள்ளைகளிடமும் காட்டி வந்திருக்கிறார்கள் என்று கம்பன் காவியம் எழுதுகிறபோது, அந்தத் தாயன்பு யாரிடத்தில் மிகவும் சிறந்து விளங்குகிறது என்று விவாதித்து முடிவு கட்டுவது சிறப்பான ஒன்றல்லவா?

பதினெட்டுப் பேர் இந்தத் தாயாரின் தன்மைகளை எல்லாம் எடுத்துக் கூறினார்கள். கோசலை கட்சியில் வாதித்தவர் அவள் ராமனிடம் காட்டிய அன்பை விடப் பரதனிடமே அதிகம் அன்பு காட்டுகிறாள் என்று குறிப்பிட்டார். பரதன் பிறந்ததுதான் கைகேயி வயிற்றில், அவர் வளர்ந்ததெல்லாம் கோசலை மடியில் என்றுதானே கவிஞன் கூறுகிறான்.அதனால், தான் பெற்ற ராமனிடத்து