பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 67

அன்பு செலுத்தவும் அவள் தவறவில்லையே. தன் மகன் ராமனுக்குப்பட்டம் என்று கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். தனக்கு அந்த நற்செய்தியைச் சொன்னவர் களுக்கு எல்லாம் வெகுமதிகள் அளிக்கிறாள். சுமித்திரை யையும் உடன் கூட்டிக்கொண்டு கோயிலுக்குச் சென்று திருமாலை வணங்குகிறாள். 'என் வயின் தரும் மைந்தர்க்கு இனி அருள் உன் வயத்தது' என்று பிரார்த்தித்துக் கொள்கிறாள். இப்படி ராமன் முடிசூடும் நிகழ்ச்சியை மிக்க மகிழ்ச்சியோடு எதிர் நோக்கிக் கொண்டிருந்த கோசலை முன், மறுநாள், முடிசூடுதல் தடைப்பட்டு தனியனாய் ராமன் வருகின்றான். அவன் வருகின்ற கோலத்தை,

குழைக்கின்ற கவரி இன்றிக்

கொற்ற வெண் குடையும் இன்றி இழைக்கின்ற விதி முன்செல்ல தருமம் பின் இரங்கி ஏங்க மழைக் குன்றம் அனையான் மெளலி

கவித்தனன் வரும் என்று தழைக்கின்ற உள்ளத் தன்னாள்

முன் ஒரு தமியன் சென்றான். என்று கம்பன் பாடுகிறான். கிரீடம் சூடாத தலை யொடும், மஞ்சனப் புனித நீராட்டப்படாத சிகையொடும் வரும் மகனைக் கண்டு துணுக்கம் உறுகிறாள். நடந்தது. என்ன? நெடுமுடி புனைதற்கு ஏதாவது இடையூறு நிகழந்ததா? என்று மிக்க ஆதங்கத் தோடேயே கேட்கிறாள். காவிய நாயகனான ராமனும் மிகவும் பக்குவமாக 'அம்மா ஒன்றும் இல்லை - நின் காதல் திருமகன் பங்கமில் குணத்து எம்பி பரதனேதுங்கமா முடி