பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி மண்டபத்தில் விவாதத்திற்காக ஒரு பொருளை நிர்ணயித்தல் முதல் பணி. வாதிடுவோர் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு கட்சியாகப் பொருளுக்கேற்ப அமையச் செய்தல் அடுத்த பணி. ஒவ்வொரு கட்சியிலும் கட்சி எண்ணிக்கைக்கு ஏற்ப முறையே ஐந்து அல்லது நான்கு அல்லது மூன்று பெயர்கள் அமையச் செய்தல் அடுத்தபணி. ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வு இல்லாத வண்ணம் வாதத்திறமையுள்ளவர்களைக் கொண்டதாக ஒவ்வொரு கட்சியும் அமையச்செய்வது இன்றியமையாத பணி. அப்படி அமையும் கட்சி ஒவ்வொன்றுக்கும் ஒருவர் முதல்வராக அதாவது, கட்சித் தலைவராக விளங்க வேண்டும். இவற்றை எல்லாம் செம்மையாக அமைத்துக் கொண்ட பின்னர் எல்லா வகையிலும் பொருத்தமான ஒருவரைப் பட்டிமண்டபத் தலைவராக அமைக்க வேண்டும். -

பட்டி மண்டபம் தொடங்கியதும், புட்டி மண்டபத் தலைவர் பட்டி மண்டபத்தின் பொருளையும் அப் பொருளின் உட்கருத்தையும் விளக்கி, வாத முறையை யும், காலவரம்பையும் புலப்படுத்தத் தமது முன் னுரையை நிகழ்த்த வேண்டும். தலைவர் கருத்து என்ன என்பதை ஊகிக்கக் கூட முடியாதவாறும், எக்கட்சிக்கும் ஆதரவுக் குறிப்புக்கள் தம் உரையிலிருந்து கிடைத்து விடாதவாறும், நடுநிலை பிறழாமல், இருக்க வேண்டும் தலைவர் முன்னுரை. - -

பின்னர் நிகழ்ச்சி நிரலில் கண்ட வரிசைப் படி ஒவ்வொரு கட்சியின் முதல்வர்களும் தங்கள் தங்கள் கட்சியை எடுத்துக் கூறுவார்கள். பின்னர் அங்ங்னமே வரிசையாக ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த துணை