பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - பட்டிமண்டபம்

சூடுகின்றான்' என்கிறான். இதைக் கேட்டதும் தன் மகன் ராமனுக்குப் பட்டம் இல்லை என்பது தெளிவாகி விடுகிறது கோசலைக்கு. இதனால் அவள் அதிர்ச்சி அடையவில்லை. ஏதோ வழிவழியாக மன்னர் பரம்பரை யில் தலைமகனே பட்டம் சூடுவது என்பதுதான் முறையாக இருந்திருக்கிறது. இந்த முறை தவறினாலும் பரவாயில்லை. உன்னை விட நல்ல குணசாலியும் நிறை குணமும் உடைய பரதன்தானே முடிசூடுகின்றான் என்று சொல்லி ராமனையே தேற்ற முனைகிறாள். இதைச் சொல்லும் கம்பன் கோசலைக்குத் தன் பிள்ளை வேறு, மாற்றான் பிள்ளைகள் வேறு என்பது தெரியும். என்றாலும் அந்த வேற்றுமை உணர்வு தன் உள்ளத்தில் வேர் ஊன்றாதபடி ஆற்றல் சால் கோசலை தன் அறிவின் திறத்தாலே அந்த வேற்றுமையை மாற்றுகிறாள் என்கிறான்- - -

முறைமை அன்று என்பது

ஒன்று உண்டு - அதல்லது நிறை குணத்தவன்

நின்னிலும் நல்லன் குறைவு இலன் எனக்

கூறினாள் நால்வர்க்கும் மறுஇல் அன்பினில்

வேற்றுமை மாற்றினாள்.

என்பது கம்பன் பாடல். இப்படியெல்லாம் நிறைந்த பண்புடையவளாக இருந்த கோசலை தன் மகன் ராமன் காடு செல்கிறான் என்று கேட்டதும் துடிதுடித்துப் போகிறாள். - * .

வஞ்சமோ மகனே உனை மாநிலம்

தஞ்சமாக நீதாங்கு என்ற வாசகம்