பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 69

என்று குமுறுகிறாள். கடைசியில் தன் மகன் சுட்டிக் காட்டியபடி ராமனது பிரிவினில் வருந்தும் தசரதனைத் தேற்றுவதற்காகவே அயோத்தியில் தங்கியிருக்க உடன்படுகிறாள். இத்தனையும் அவள் தாயன்பை விளக்கவில்லையா?

இன்னும் தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன ஒதுக்கிவிட்டு காட்டிற்குச்சென்றி ராமனை மீட்டும் நாட்டிற்குக் கொண்டுவர பரதன் காடு செல்லும் பேர்து கோசலையும் உடன் செல்கிறாள். கங்கைக் கரையில் இருந்த குகனை, பரதன், 'இராக வனுக்கு இன்துணைவன், இலக்குவதற்கும் இளைய வர்க்கும் எனக்கும் மூத்தான்' - என்று அறிமுகப் படுத்தியபோது அவனையுமே தன்னுடைய மகனாக ஏற்று 'நைவீரலிர் மைந்தீர்! இனி இந்தக் குகனையும் சேர்த்துக்கொண்டு நீங்கள் ஐந்து சகோதரர்களாக வாழுங்கள்' என்று ஆசி கூறுகிறாள். இப்படியெல்லாம் ராமன் மீது மாத்திரம் அல்ல பரதன், இலக்குவன், குகன் முதலியோரிடம் தாயன்பு காட்டும் தாயாக காவியத்தில் உலா வருகிறாள் கோசலை - என்பது கோசலை கட்சியாரது வாதம்.

கைகேயி வான்மீகரது காவியப்படி தசரதனுடைய மூன்றாவது மனைவி. பிள்ளைப்பேறு இல்லாதிருந்த தசரதன் கேகய மன்னனை அடுத்து அவன் மகளாகிய கைகேயியை மணம் பேசுகின்றான். அப்போது அவள் வயிற்றில் பிறக்கும் மகனுக்கே பட்டம் என்று வாக்களிக்கிறான். இதுவே அவனது சுல்கமாக இருக்கிறது. கவிச்சக்ரவர்த்தி கம்பன் கைகேயியைத் தசரதனது இரண்டாவது மனைவியாக்குகிறான். சுல்கத்தைப் பற்றி