பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பட்டிமண்டபம்

ஒன்றும் குறிக்கவில்லை என்றாலும் கைகேயியை

நிறைந்த தாயன்பு உடையவளாகவே சித்திரித்திருக்

கிறான். ராமன் கோசலை வயிற்றில் பிறந்தாலும்

வளர்ந்ததெல்லாம் கைகேயி இடத்தில்தான். இவளும்

கோசலையைப் போல மாற்றாளின் மகன், தன் மகன் என்ற

வேற்றுமை இல்லாமலேயே எல்லோரிடத்தும் அன்பு காட்டியவள். கோசலை வேற்றுமையை உணர்ந்தாலும்

தன் அறிவாற்றலால் அந்த வேற்றுமையை மாற்றத்

தெரிந்திருந்தாள். கைகேயியோ, அந்த வேற்றுமையையே

உணராதவளாகவே இருக்கிறாள். அதானல்தான் அவள்

வேற்றுமை உற்றிலன்' என்று கம்பன் அவளுக்கு ஏற்றம்

கொடுக்கிறான். ராமனுக்குப் பட்டம் என்றறிந்த மந்தரை அதைத் தடுக்க கைகேயியை அணுகுகிறாள். தூங்குகின்ற

கைகேயியை எழுப்புகிறாள். 'உனக்கு இடர் வருகிறது"

என்றாள். அப்போது கைகேயி பேசுகிறாள்.

தெவ்வடு சிலைக்கை என் சிறுவர் செவ்வியர் அவ்வவர் துறை தொறும்

அறம் திறம்பலர் எவ்விடர் எனக்கு வந்து அடுப்பது ஈங்கு: என்றும், விராவரும் புவிக்கெலாம்

வேதமேயன் இராமனைப் பயந்தஎற்கு

இடர் உண்டோ?

என்றும் பேசுகிறான். 'என் பிள்ளைகள் எல்லோருமே நல்லவர்கள்" என்று வேற்றுமை காட்டாது பேசியதுடன்