பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 7.

'ராமனைப் பெற்ற தாயாகிய எனக்கு இடர் வருமோ என்று பேசும்போது தாயன்பில் சிறந்தவளாகக் காணப் படுகிறாள். -

இப்படி அன்பு காட்டிய தாய்தான்ே ராமனைக் காட்டிற்கு அனுப்பவும் முனைகிறாள் என்று குறை கூறுவோர்க்கு அது இராமாவதார ரகசியம். ராமன் பிறந்ததே அரக்கர்களை அழிக்கத்தானே? அதற்கு ராமன் காட்டிற்குப் போய்த்தானே ஆக வேண்டும். அரக்கர்செய்த பாவமும், நல்லவர்கள் செய்த தவமுமே சதி செய்து அவளை இப்படி ஒரு காரியம் செய்யத் துண்டி யிருக்கின்றன. இதைத்தானே கம்பன், -

அரக்கர் பாவமும் அல்லவர்

இயற்றிய அறமும் துரகக, நல அருளதுறநதனள

துமொழி மடமான் என்று கூறுகிறான். இந்த ஒரே காரியத்தால் அவள் தாயன்பு இல்லாதவள் ஆகிவிட மாட்டாள். சிறையிருந்த சீதையை மீட்டுவரும் ராமனும் விண்ணுலகில் இருந்து இழிந்து வந்த தந்தையிடம்,

தீயள் என்று நீதுறந்த

என் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம்

வரம் தருக என்று தானே வேண்டுகிறான். இப்படி காவிய நாயகனான ராமனாலேயே என் தெய்வம் என்று போற்றத் தகுந்த கைகேயியே தாயன் பில் சிறந்தவள் என்பது கைகேயி கட்சியினர் வாதம். -