பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பட்டிமண்டபம்

மூன்றாவதாக வரும் சுமித்திரை கம்பனது காவியத்தில் தசரதனது மூன்றாவது மனைவியாக, இளைய மென் கொடியாக இருக்கிறாள். மற்ற இருவரும் ஒவ்வொரு பிள்ளையையே பெற இவள் மட்டும் இலக்குவன், சத்ருக்கனன் என்று இரண்டு புதல்வர்களைப் பெறுகிறாள். பெற்றாளே தவிர அவர்களை வளர்க்கவில்லை. இலக்குவனை ராமன் துணைவனாகவும், சத்ருக்கனனை பரதன்துணைவனாகவும் வளரும்படி விட்டு விடுகிறாள். இவளுக்கு ராமனிடத்து அன்பு அபரிமிதமாகவே இருக்கிறது. அதனால் ராமன் காட்டுக்குச் செல்லுகிறான். என்றபோது, தன் மகன் இலக்குவனையும் அவனுடன் அனுப்பத் துணிகிறாள். அத்தோடு 'இனி ராமன் இருக்குமிடமே அயோத்தி - ராமனே. உனது தந்தை, சீதையே உன் தாய் என்றும் கூறுகிறாள். இத்துடன் நில்லாது

பின்னும் பகர்வாள், மகனே இவன் பின் செல், தம்பி என்னும் படிக் கன்று

அடியாரின் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன்

வந்திடில் வா- அது அன்றேல் முன்னம் முடி என்றனள்

வாள் விழி சோர நின்றாள் என்று கம்பர் பாடுவதிலிருந்து அவள் தாயன்பு எப்படித் தலையாய அன்பு என்று தெரிந்து கொள்ள லாமே. அதனால் தானே கங்கைக் கரையில் குகனும், 'அன்பின் நிறைந்தாளை உரை என்று பரதனிடம் கேட்கிறான். இதனால் சுமித்திரையே தாயன்பில் சிறந்த வள் என்பது சுமித்திரைகட்சியார் வாதம். -