பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 73

இம் மூன்று கட்சியாரது வாதத்தைக் கேட்டபின் அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக்காட்டும் சான்று களைப் பார்த்தபின் அவரவர் கட்சிக்கே பலம் அதிகம் என்று தோன்றும். சிலர் வாதித்தபடி தன் சொந்தக் குழந்தைகளிடம் காட்டுகிற அன்பே அன்பு. மாற்றாள் மகனிடம் காட்டுகிற அன்பு உண்மையான அன்பல்ல என்ற வாதத்தை நான் ஏற்கத் தயாராக இல்லை. உண்மையிலே இப்படி தன் மகன், மாற்றாள் மகன் என்ற வேற்றுமையே இல்லாத அன்பு காட்டுகிற தாயர் மூவரை உருவாக்கிய பெருமை கம்பனுக்குத்தான் உண்டு.

ஆனால் விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருள் தாயன் பில் தலை நின்றவர் யார் என்பது. மூவரும் தாயன் புடையவர்கள்தாம் என்றாலும் கைகேயியின் அன்பு நிலைத்த அன்பாக இருக்கக் காணோம். கைகேயி ராமனைத் தன் மகனாகவே கருதுகிறாள். அவனை மகனாகப் பெற்றதில் பெருமிதமே கொள்ளுகிறாள் என்றாலும், கூனி என்னும் ஒரு சேடி அந்த அன்பைக் கலைக்கும் அளவுக்கு ஆழ்ந்த அன்பு இல்லாதவளாகி விடுகிறாள். தெய்வக் கற்பினாள் என்று போற்றப்படும் அவளே சூழ்நிலை காரணமாகத் தன் அன்பை எல்லாம் மறந்து தன் கணவனிடம் வாதாடி வரம்பெற்று ராமனைக் காட்டிற்கு அனுப்பிவிடுகிறாள். இந்த நிகழ்ச்சிக்கு முன்வரை அவளைப் புகழ்ந்து கொண்டே வந்த கம்பன் அவளை இரக்கம் இலாள் இடரிலாமுகத்தாள்- தீயவை யாவினும் சிறந்த தீயாள் என்றெல்லாம் திட்டித் தீர்க்கிறான். படரெலாம் படைத்தாள், பழி வளர்க்கும் செவிலி' என்று தன் மகனான பரதனும் இகழ்ந்து பேசும் வண்ணம் செய்து விடுகிறாள். ராமன்ப்ேரில் உள்ள அன்பை மட்டுமா துறந்து நிற்கிறாள், தன் மகன் பரதனுக்கு தீராத பழி தரும் காரியத்தையல்லவா செய்து