பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பட்டிமண்டபம்

விடுகிறாள். தன் கணவன் உயிரையும் குடிக்கும் காலனாக மாறுகிறாள். இத்தகைய தாயை, தாயன் பில் தலை நின்றவள் என்று கூறுவது எங்ங்னம்?.

இனி சுமித்திரையைப் பார்க்கலாம். அவள் கட்சியில் நின்று பேசிய ஒரு பெண்மணி சொன்னதுபோல அவளு டைய பெருமை எல்லாம் இரண்டு கப் பாயசம் குடித்து இரண்டு பிள்ளையைப் பெற்றதோடு சரி என்று அமைந்து விடுகிறது. அவள் தன் மக்களிடமோ, மற்றவர்களிடமோ அன்பு காட்டியதற்கு சான்றுகள் ஒன்றுமே கம்பன் தரவில்லை. அவதாரமூர்த்தியாகிய ராமனின் சேவகனாக தன் மகன் இருந்து புகழ் பெற்றால் போதும் என்று நினைக்கிறாள். இராம சேவையில் உள்ள காதலால், தன் மகன் இலக்குவன் ராமன் இறப்பதற்கு முன்னரே இறந்து விட வேண்டும் என்று கூட விரும்பு கிறாள். இப்படி விரும்பும் சுமித்திரையை, உயர்ந்த பண்பும் தியாக புத்தியையும் உடையவள் என்று பாராட்டலாம். ஆனால் தாயன்பு உடையவள் என்று பாராட்ட முடியுமா என்ன?

தசரதனது முதல் தேவியான க்ோசலை தாயன்பிலும் முதல் ஸ்தானத்தைப் பெற்றவளாகவே நிற்கிறாள். அவளைப் பற்றி கவிச்சக்ரவர்த்தி கம்பன் பேசுகின்ற போதெல்லாம் நிறைந்த மொழியாலேயே பேசுகிறான். கொண்டல் வண்ணனாம் ராமனை நல்கியவள் அல்லவா அவள். உலகம் யாவையும் தன் வயிற்றில் அடக்கிய மாயனைத்தன் வயிற்றில் அடக்கும் தவத்தினள் ஆயிற்றே. மூன்றுலகம் ஈன்றானை முன்னின்ற பேறு அவளுக்குத் தானே வாய்க்கிறது. இத்தோடு கோக்கள் வைகும் முற்றத்தாளான தசரதச் சக்கரவர்த்தியின் முதல் தேவி. இவள் ஆற்றல் சால் கோசலையாக, அன்புத் தாயாக உருவாகிறாள். அவளது அன்பு அறிவோடு கலந்த அன்பு.