பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 75

அதனால்தான் தன் மகன் மாற்றான் மகன் என்றெல்லாம் வேற்றுமையை உணர்ந்தவளாயிருந்தும், அவ்வேற்று மையை எல்லாம் மாற்றி அந்த அன்பில் நிலைத்து நிற்க வும் அறிந்திருந்தாள். கைகேயியைப் போல, வேற்று, மையை உணராதவளாக வாழ்ந்து பின்னர் ஒரு சேடியின் சூழ்ச்சியினால் நிலை தடுமாறித் தவிக்காத வளாக இருக்கிறாள். ராமன் காடு சென்றபின் அயோத்தி வந்த பரதனை முதன் முதல் கண்ட்போது, அவனும் அவன் தாயின் சதிக்கு உடந்தையாக இருந்திருப்பானோ என்று சந்தேகிப்பதில் அவள் தாயன்பு நிலை தடுமாறு கிறதே, என்று கேட்கலாம். அங்கு அவள் பேசுவது எல்லாம் 'கேகயர் கோமகள் இழைத்த கைதவம் ஐய! நீ அறிந்திலைபோதும்!' - என்ற கூற்றுத்தான். இதன்மூலம், கோசலை கணநேரத்திற்குப் பரதனையும் சந்தேகிககிறாள் என்று ஊகிக்க முடிகிறதே தவிர அப்படியே சந்தேகித்தாள் என்று உறுதியாகக் கூற முடியவில்லை-ஏதோ தகவல் அறியக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம் தானே?

இந்த ஒரு இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் அவள் பரதனைக் குறை கூறியதாகக் கம்பன். குறிக்கவே யில்லை. ராமனிடத்தும், பரதனிடத்தும், ஏன் இலக்கு வனிடத்தும் ஒரே தன்மையான அன்பு காட்டியவளாக அமைகிறாள். கடைசியில் ராமன் குறித்த காலத்தில் வராதது கண்டு தீக்குளிக்க நின்ற பரதனைப் பார்த்து, 'எண்ணில் கோடி ராமர்கள் எண்ணிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ என்று கூறுகின்ாளே, அது ஒன்றே அவளை விண்ணுக்கு உயர்த்திவிடுகிறதே! அவள் தாயன்பே ஆரம்பம் முதல் கன்டசிவரை நிலைத்து நின்று ஒளி வீசிய தாயன்பு. ஆம். தாயன்பில் தலை நின்றவள் கோசலையே என்று தீர்ப்புக் கூறி அமைதி பெறுகின்றேன்.