பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

6

கம்பனில் மேலோங்கி நிற்கும் பண்பு

புத்திரவாஞ்சையா? சகோதர பாசமா?

பதிபக்தியா?

இன்றைய பட்டிமன்றத்திற்கு உரியபொருள் கம்பனில் மேலோங்கி நிற்கும் பண்பு புத்திரவாஞ்சையா? சகோதர பாசமா? பதி பக்தியா? என்பதாகும். பண்பு என்றால் என்ன? வள்ளுவர் தந்த திருக்குறளில் பண் புடைமை என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. இதற்கு உரை கூறும்போது பண்புடையவராக வாழும் நல்வழி' என்றே கூறினார் ஆங்கில அறிஞரான டாக்டர் ஜி. யு.போப். இந்தப் பண்புடைமையை விளக்குதல் எளிதன்று. மேலைநாட்டு மொழிகளில் இதை விளக்க ஏற்ற Qgird G60 g)6bana. Courtesy, Culture- arsip -ggi,8lavé சொற்கள் எல்லாம் பண்புடைமையின் நிறைந்த பொருளை விளக்குவதாக இல்ல்ை. கொஞ்சம் விரித்தே சொல்லலாம் என்றால் நிறைவின் சிகரம்' (Crown of Perfection) என்றோ, சகல நற்குணங்களும் இணைந்து நிற்கும் ஓர் அரிய குணம் என்றோ சொல்லக்கூடும் என்கிறார். இன்றைய விவாதத்திற்குத் த்லைப்பை